• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தியாகி க.சொ.கணேசன் நினைவிடத்தில் மலரஞ்சலி..,

ByT. Balasubramaniyam

Aug 22, 2025

அரியலூர் மாவட்டம்,கண்டியங்கொல்லை கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் நினைவிடத்தில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது .

திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் ஏராளமான மாவட்ட,ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து,
மலரஞ்சலி செலுத்தினர் .

பின்னர் திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும்,அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி,தா.பழூர் நகரில் மௌன ஊர்வலமும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,மாவட்ட பொருளாளர் கு.இராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன்,
பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி,விசிக மாவட்ட செயலாளர் இரா.கதிர்வளவன், ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய இரா.மணிமாறன்,ஆண்டிமடம் கிழக்கு ரெங்க.முருகன்,தா.பழூர் மேற்கு ப.தனவேல்,தா.பழூர் மத்திய ஒன்றிய இரா.அண்ணாதுரை,ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய நா.கணேசன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர், நகராட்சி துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், திமுக தலைமை கழக பேச்சாளர் இரா.இளஞ்செழியன்,விசிக ஒன்றிய செயலாளர் தங்கராசு,திக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம்,மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் தங்க.ராமகிருஷ்ணன்,எஸ்.ஆர்.இராமராஜன்,கொண்டியார் செல்வராஜ்,போக்குவரத்துக் கழக மத்திய மண்டல தொமுச தலைவர் த.சேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,கிளை கட்சி செயலாளர்கள்,தோழமைக் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.