புதுக்கோட்டை மாநகரத்தின் மேயர் திலகவதி அவர்களின் கணவரும் முன்னாள் மாநகர திமுக செயலாளருமான செந்தில் கடந்தாண்டு மறைவுற்றார். புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தமட்டிலும் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரும்பாலும் தலைவர் கலைஞர், முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், போன்ற தலைவர்களுக்கு தான் இதுவரை அங்கு உருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் புதுக்கோட்டை மாநகர மேயரின் கணவர் செந்திலுக்காக இந்த முறை முதன்முதலாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் உருவப்படம் வைத்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்ல பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், துணை மேயர் லியாகத் அலி, மாநகரச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பொறுப்பில் உள்ளவர்களும் தொண்டர்களும் மலரஞ்சலி செலுத்தியதோடு அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைதி ஊர்வலமாக வந்து செந்திலின் வீட்டிலும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை சண்முக பழனியப்பன்- இராமு அம்மாள் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அறக்கட்டளை நிறுவனர் பழ. குமரேசன் அனைவரையும் வரவேற்றார். உணவக உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சண்முகபழனியப்பன் தலைமை தாங்கினார். மருத்துவர் எட்வின், முத்துப்பிள்ளை கேண்டின் கர்ணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அறிவுடை நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரத்தவங்கி மருத்துவர் சரவணன் தலைமையில் மருத்துவக் குழுவினருடன் இரத்ததான முகாம் நடைபெற்றது. அறக்கட்டளையின் துவக்க நிகழ்வை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் .ரகுபதி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இரத்ததான முகாமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மெய்யநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் திரு. செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகர மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் இரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். நிகழ்வுக்கான பணிகளை குருதிக்கூடு அமைப்பைச் சேர்ந்த முத்துராமலிங்கம், பாரதி டியூசன் சுப்பிரமணியன், யோகா செல்வராஜ், ஆகியோர் செய்திருந்தார்கள். அறக்கட்டளை நிர்வாகி பழ .சண்முகம் (எ)ராஜா நன்றி கூறினார்.




