அடுக்குமாடி குடியிருப்புகளில் கவனம் செலுத்தும் நடுத்தர மக்களின் சுத்திகரிப்பு நிலையத்துடன் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்கின்றதா..? அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள் கூறுவது என்ன..?
கோவை மாநகரில் வசிக்கும் நடுத்தர மக்களின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை அறிமுகம் செய்துள்ளது கோவை கட்டுமான நிறுவனங்கள்..!
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக மாநகரில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை கணிசமாக அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மாநகர் பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்ற நிலையில் அதற்கான இட வசதிகள் இல்லை இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் – கே.ஜி. குழும கட்டுமான நிறுவனத்தில் ஒரு அங்கமான டவுன் மற்றும் சிட்டி டெவலப்பர்ஸ் தங்களது புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டமான “யுனைடெட் சிட்டி திட்டம் நடுத்தர மக்களுக்காக கோவை பீளமேடு பகுதியில் உள்ள இலைத் தோட்டத்தில்
அறிமுகம் செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கே.ஜி. குழுமத்தின்
டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் இணை நிறுவனர், சஞ்சனா விஜயகுமார் – mவிற்பனை பிரிவு துணை தலைவர், சுரேஷ் குமார் – மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷ்வா ஆகியோர்
டவுன் மற்றும் சிட்டி டெவலப்பர்ஸ் தங்களது புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டமான “யுனைடெட் சிட்டி திட்டம் குறித்து கூறியதாவது..,
குறிப்பாக பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்த பிரதான இடம், நீண்ட கால மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை வசதிக்காக விரும்பும் வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தேர்வாக அமையும் எனவும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்க்காக 24″மணி நேரம் கண்காணிப்பு கேமரா வசதி மோஷன்-சென்சார்விளக்குகள் மற்றும் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடனும் வாழ்விடத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.