மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் அருள்மிகு கருப்புசாமி கம்ப காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

நேற்று இரவு முதல் விடிய விடிய சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்று காலை 5:30 மணி அளவில் 3 அதிர் வேட்டுக்கள் வெடித்தவுடன் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தல் தொடங்கியது. இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீன்பிடி ஆர்வலர்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். முதலைக்குளம் கண்மாயில் மீன்களை பிடித்து உண்பதால் நோய்கள் குணமாவதாகவும் வேண்டுதல் நிறைவேறுவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி திருவிழாவினை முதலைக்குளம் கண்மாய் பாசன சங்கத் தலைவர் ராமன் ஒருங்கிணைப்பு செய்தார். பாரம்பரிய எப்படி வருடம் தோறும் மீன் பிடித்து திருவிழா நடைபெற்று வருவதாகவும் மீன்பிடித் திருவிழா நடத்துவதால் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.