• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரியில் தரை தட்டிய மீன் பிடி விசைப்படகு..,

குமரி மாவட்டத்தில் விசைப் படகில் கடலில் ஆழ்கடலில் பல வாரங்கள் தங்கி மீன் பிடிப்பது. குமரியை சேர்ந்த மீனவர்களின் வாடிக்கையான மீன் பிடித்தல் தொழில்.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து 9_மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிக்க கடந்த (நவம்பர்-7)ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் பயணப்பட்டனர்.நள்ளிரவில் சம்பந்தப்பட்ட விசைப்படகு முட்டம் துறை முகத்தை தாண்டி (சேரியா முட்டம்) தாண்டி வந்து கொண்டிருந்தது.

விசைப்படகை ஆந்திராவை சேர்ந்த ரமேஷ் என்பவர் படகை ஓட்டிய நிலையில். எஞ்சிய மீனவர்கள் அனைவரும் ஓடும் படகில் தூங்கி கொண்டிருந்தனர். படகை ஓட்டிய ரமேஷ் யும் கண் அயர்ந்து விடவே. விசைப் படகு அதன் இயக்க தடம் மற்றும் திசை மாறிய படகு கட்டுப்பாட்டை இழந்து கடல் பரப்பில் இருந்து விலகி சங்கு துறை பகுதியில், கடற் கரையில் தரை தட்டி நின்றுவிட்டது.

விசைப்படகில் இருந்த 9_மீனவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும். படகை இயக்க முடியாத அளவில் இயந்திரம் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் தரை தட்டிய படகை இயக்க முடியாத நிலையில்.சங்குதுறை பகுதியில் உள்ள மீனவர்கள் படகில் இருந்த மீனவர்களை தறை இறக்கிய நிலையில், கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதுடன். படகை அந்த பகுதியில் இருந்து அகற்றி கடலுக்குள் கொண்டு சென்று நங்கூரம் இட்டு பாது காப்பாக நிறுத்தினார்கள்.