• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைக்கு நிதி உதவி

BySeenu

Dec 22, 2024

கோவையில் அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைகள் மருத்துவ உதவிக்கென பள்ளி நிர்வாகம் சார்பாக ஒரு இலட்சம ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அனன் சர்வதேச பள்ளியின் 13 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஷார்ப் நிறுவன குழுமங்களின் தலைவர் கே.ஆர்.ராமச்சந்திரன், அனன் சர்வதேச பள்ளியின் தாளாளர் கண்ணன் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக இதயங்கள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தாளாளர் கண்ணன் ராமச்சந்திரன் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சமுதாய நல்லிணக்க பண்புகளை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறிய அவர், அதன் படி இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பள்ளி நிர்வாகம் சார்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ உதவியை தொடர்ந்து செய்து வரும் இதயங்கள் அறக்கட்டளைக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக நிதி உதவி வழங்குவதுடன்,
இதில் மாணவர்களின் பெற்றோர்களும் நிதி உதவி வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து (Power Of Decisions) பவர் ஆஃப் டெசிஷன் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில், மாணவர்களின் ஆரம்ப கல்வி துவங்கி அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சிறு குழந்தைகள் முதல் மாணவ,மாணவிகள் மேடையில் தத்ரூப நடனங்களுடன் விளக்க உரை வழங்கினர்.

தொடர்ந்து அனன் பள்ளியின் தாளாளர் கண்ணன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ உதவிக்கென ஒரு இலட்சம் ரூபாய் காசோலையை இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இணைந்து ரூபாய் ஒரு இலட்சத்து ஒண்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.

விழாவில் பள்ளியின் முதல்வர் நந்தகுமார்,சீனியர் முதல்வர் சந்திரசேகர் உட்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி ஆண்டு விழாக்களில் ஆடல்,பாடல் கலைநிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெறும் நிலையில் குழந்தைக மருத்துவ உதவிக்காக பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பெற்றோர்களும் நிதி உதவி வழங்கிய இந்த விழா நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.