கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை_ சுவாமி விவே கானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ரூ.38.கோடி நிதி ஒதுக்கீட்டில் கண்ணாடி இழை பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 30_ம் தேதி. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25_வது ஆண்டின் நினைவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்ட பின்,கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக கண்ணாடிப் பாலம் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.நேற்று வரை (மே_4)ம்தேதி வரை 8,42,600 சுற்றுலா பயணிகள் பார்வை இட்டுள்ளதாக.கடல் பாலத்தினை மூன்றாவது முறையான ஆய்வின் போது அமைச்சர்
எ.வ.வேலு தெரிவித்தார்.
கண்ணாடிப் பாலத்தின் பணிகள் நிறைவடைந்ததும் பாலத்தின் தாங்கும் தன்மையை. தமிழக முதல்வரின் உத்தரவு படி.சென்னை ஐ ஐடி துறை வல்லுநர்கள் ஆய்வு செய்த பின் சுற்றுலா பயணிகள் முதல் முதலாக அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி கண்ணாடிப்பாலம் அனைவரையும் வெகுவாக மக்களின் ஈர்ப்பை பெற்ற நிலையில்,கண்ணாடிப் பாலம் திறந்த பின் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினம், தினம் அதிகரித்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது.
பாலம் திறந்த இரண்டு மாதத்தில் கடந்த மாதம். குமரி ஆட்சியர் அழகு மீனா திடீர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கண்ணாடிப் பாலத்தில் சில பணிகள் நடைபெறவிருப்பதால்.5_நாட்கள் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு ஏன் என்ற கேள்வி குமரி மக்கள் மனதில் ஒரு கேள்வி குறியாக எழுந்தது.
டெல்லியை சேர்ந்த தனியார் பொறியாளர்கள் ஆன “ரைட்ஸ்” நிறுவனத்தை சேர்ந்த வல்லுநர் குழு.ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் டிரம் களில் தண்ணீரை நிரப்பி மூன்று நாட்கள் பாலத்தின் வலுவை ஆய்வு செய்த பின்.பாலம் மிகுந்த உறுதியுடன்,ஒரே நேரத்தில் 750 பேரை தாங்கும் திறன் கொண்டதாக இருப்பதாக ரைட்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்த நிலையில்.

கடல் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையிலே நேற்று(மே4)ம் நாள் இரவு 8மணி அளவில் அமைச்சர்கள் எ.வ.வேலு,மனேதங்கராஜ், தமிழக வாணிப கழகத்தின் தலைவர் சுரேஷ் ராஜான், குமரி ஆட்சியர் அழகு மீனா துறை சார்ந்த பொறியியல் வல்லுநர்கள் இரண்டு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கண்ணாடிப் பாலம் மூன்றாம் முறையாக ஆய்வுக்கு பின். கண்ணாடி பாலத்திலே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தவைகள்.
கண்ணாடிப் பாலம் மிகுந்த உறுதியுடன் 750_பேரை ஒரே நேரத்தில் தாங்கும் வலு கொண்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் வழியாக கண்ணாடிப் பாலம் வரும் பகுதியில் சுற்றுலா பயணிகள் மிகுந்த நெருக்கமாக வருவதை கட்டுப்படுத்த பாலத்தின் முன் பகுதியில் கேட் அமைக்ப்போகிறோம்.
கண்ணாடிப் பாலத்திற்கு இதனை பார்வையிட்ட மக்களே”பெயர்”சூட்டிவிட்டார்கள்.
ஐயன் திருவள்ளுவர் கண்ணாடி இழை பாலம் என்று. இனி புதிதாக எந்த பெயரும் சூட்டவேண்டாம். இந்த பாலம் 100_ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வலிமை உடையது எனவும் பெருமை மிகுந்த மனோ நிலையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.