செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ் காந்தி நகரில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது!

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி நாட்களில் மருளாடி சுமதிஅம்மா அவர்களின் தலைமையில் மூன்று நாள் காப்பு கட்டி, அம்மனுக்கு பதிவலுக்கு போட்டு கூழ் வார்த்தல் மற்றும் 11 கத்திகள் பதித்த செயற்கை மரம் ஏறுவது வழக்கம்!
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அம்மனுக்கு காப்பு கட்டி நெல்லிக்குப்பம் ரோட்டில் அமைந்துள்ள துலுக்கானத்தம்மன் ஆலய குளக்கரையில் இருந்து காப்பு கட்டிய 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மன் தேர் ஜோடித்து கரகம் மற்றும் பால்குடம் எடுத்து, மேல தாளங்களுடன் ஊர்வலம் சென்று பத்ரகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் மருளாடி சுமதிஅம்மாவுக்கு பத்ரகாளியம்மன் வேஷம் இட்டு அம்மன் வேண்டுதலாக நாக்குவேல் இட்டு அம்மனை வர்ணித்து வழிபட்டனர்.
மற்றும் ஆலய வளாகத்தில் 11 கத்திகள் பதிக்கப்பட்ட சேர்க்கை மரம் ஏறி பக்தர்களுக்கு எலுமிச்சம் பழம் கொடுத்து மருளாடி சுமதிஅம்மா அருள்வாக்கு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர்கள், ஊர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், ஆலய நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்!