தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் தேனி பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மணிமெண்டு சார்பில் சேவை துறை என்ற அடிப்படையில் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவிற்க்குமான வித்தியாசத் தொகயை பட்ஜெட்டில் வழங்க வேண்டும் என பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றோம் எதற்காக திமுக அரசு 2022ல் அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை 24 ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் உரிய நிதி ஒதுக்கவில்லை எனவே பணியில் உள்ள தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் உள்ளது.
பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டிற்கு செல்லவேண்டிய நிலை மற்ற துறைகளைப் போல் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை மருத்துவ காப்பீட்டிலும் குளறுபடி ஏற்படுகிறது.
5000க்கும் மேற்பட்ட இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் வாரிசு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
25,000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது இதனால் பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை எங்களுக்கு விடுப்பு மறுப்பாலும் வேலைப் பளுவாலும் தொழிலாளர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். போக்குவரத்து கழக விரிவாக்கத்திற்கும் பணி நியமனத்திற்கும் தடையாக அதிமுக அரசால் போடப்பட்ட எட்டு அரசு ஆணைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது தமிழக அரசு.
பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும் ஓய்வு பெற்றவுடன் பணப் பலன் ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டி.ஏ உயர்வு மற்ற துறைகளை போல் மருத்துவ காப்பீடு பெறவும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தனியார் மயமாக்கப்பட்ட காண்ட்ராக்ட் உரையை முறியடிக்க வேண்டும் எனவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வரவுக்கும் செலவிற்க்குமான வித்தியாசத் தொகையை பெற்றுத் தரவும் வாரிசு வேலையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
தலைமை ஜெயக்குமார் மண்டல தலைவர் துவக்க உரை ராமச்சந்திரன் தேனி மாவட்ட செயலாளர் மண்டல துணை பொதுச்செயலாளர் மணிகண்டன் கணேஷ்ராம் மத்திய சங்க நிர்வாகிகள் முருகன்,முத்துக்குமரன் மணிமாறன்,சோலை பாக்கியசெல்வம், சதீஸ்குமார் கலந்து கொண்டனர்.
நிறைவு உரையாக அண்ணாமலை இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் தேனி மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .