அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அரசின் விதிமுறைகளை மீறியும் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி அருகிலேயே இயங்கி வந்த மதுபானக் கடையினை அகற்றிட 2017 ல் அறவழி போராட்டம் நடத்திய அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மூ.மணியன் ஆகியோர் மீது திருமானூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து,வழக்கு அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் 2ல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மூ.மணியன் ஆகிய இருவரையும் அரியலூர் குற்றவியல் நீதிமன்றம் 2 ன், நீதிபதி சொப்பனா வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.