மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 58 கால்வாய் என்பது, 58 கிராம கிராம பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பிற்கு ஒரே ஜீவாதாரம் 58 கால்வாய் திட்டமாகும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கனவு திட்டமான 58 கால்வாய் திட்டம் 33 கோடி மதிப்பீட்டில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் இருந்தது.

மேற்படி திட்டத்தினை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும், அதனை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சிக்காலத்திலும் இத்திட்டத்தின் மதிப்பீட்டை உயர்த்தி 93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆசிய கண்டத்தில் மிகவும் நீளமான 1.4 கிலோ மீட்டர் தொட்டி பாலம் உட்பட 27.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து 58 கால்வாய் திட்டத்தில் 2018 ஆம் ஆண்டு சோதனை ஓட்டமாக கால்வாயில் 150 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது அதனை தொடர்ந்து 2019,2020 ஆண்டுகளில் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டு 35 கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு மேற்படி பகுதிகளில் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் பிரச்சினைக்கு நிவர்த்தி செய்து 925 ஹேக்டேர் நிலங்களிலும் இரண்டு போக நெல் விளையும் பூமியாக மாற்றியது அம்மாவின அரசாங்கும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நீர் இருந்தபோதும் அணை நிரம்பியும், ஆற்றில் தண்ணீர் பலமுறை திறந்து விட்ட பின்பும் 58 கால்வாய் தண்ணீர் திறக்க எங்களால் பலமுறை கோரிக்கை வைத்து தண்ணீர் திறக்கவில்லை இதனால் வேளாண்மை பணிகள் போதுமானதாக நடைபெறவில்லை. நிலத்தில் நீர்மட்டம் குறைந்து போய்விட்டது தற்போது வைகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி இரண்டு முறை வெள்ள அபாயத்திற்கு விடப்பட்ட பின்பு 58 கால்வாயிலோ, திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தற்போது தண்ணீர் திறக்காமல் உள்ளது இதனால் வேளாண் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. எனவே 58 கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பைச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன் நீதிபதி, எஸ் எஸ் சரவணன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் ,தனராஜன், புளியங்குளம் ராமகிருஷ்ணன், அன்னபூர்ண தங்கராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி ,கண்ணன், காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் தமிழ் செல்வம், வக்கீல் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், நகரச் செயலாளர் பூமாராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கரன், மகேந்திர பாண்டி, சிங்கராஜா பாண்டியன் ஆதிராஜா வசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.