• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,

ByR. Vijay

Mar 18, 2025

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ; நடிகைகள், தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென காளியம்மாள் கோரிக்கை முன்வைத்தார்.

2024 25 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால் சேதம் அடைந்த நெல், பயறு, உளுந்து, பருத்தி, கடலை, எள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கியில் உள்ள விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு ஒரு டன்னுக்கு 5500 ரூபாயும் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசியல் சாசனத்தில் சட்டம் ஆக்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காளியம்மாள் கூறுகையில் ; காவிரி மேலாண்மை வாரியத்தை சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும்.

நாகை மாவட்ட பனங்குடி கிராம விவசாயிகளுக்கு மறுவாழ்வு மேல் குடியமர்வு எழுப்பிட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசியில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் நடிகைகள் மற்றும் தொழிலதிபர்களின் கடன்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசு விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று நன்றி அரசின் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.