• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லட்சுமணப்பட்டியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

ByS. SRIDHAR

May 5, 2025

குளத்தூர் அருகே லட்சுமணப்பட்டியில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டு வரும் தனியார் சோலார் பிளான்டை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட பலமுறை போராட்டம் நடவடிக்கை எடுக்காத நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்ற வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெட்சுமணப்பட்டி கிராமத்தில் தனியார் சோலார் மின் நிறுவனம் சார்பில் சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு பல விவசாயிகள் தங்களுடைய பட்டா நிலங்களை கிரையம் செய்து கொடுத்துள்ளதாகவும், கிரயம் செய்து கொடுக்காத விவசாயிகளின் இடத்தில் அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அப்ப ஊதியைச் சேர்ந்த விவசாய பலர் பலமுறை குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள பனை மரங்கள் அனைத்தையும், அந்த நிறுவனம் வெட்டி அழித்துள்ளதாகவும், விவசாயிகள் தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

எனவே தனியார் சோலார் பிளான்ட் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த சோலார் பிளான்ட் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியரிட்டம் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சோலார் பிளான்ட் தொடர்பாக எங்கள் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் லெட்சுமணப்பட்டி பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால், குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.