• Fri. Apr 26th, 2024

டெல்லியில் போராட்டதிற்காக கட்டப்பட்ட கூடாரங்களை பிரித்த விவசாயிகள்

Byகாயத்ரி

Dec 9, 2021

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும் ஒன்றிய அரசு (Centre withdraws Farm laws) உறுதிமொழிகளை அளித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச நிர்ணய விலை தொடர்பாக ஒரு குழுவை அமைப்பதாகவும், விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுவதாகவும் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.

இழப்பீடு விஷயத்தைப் பொறுத்த வரை, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளன’ என்று ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு அனுப்பிய திட்ட வரைவு குறித்து விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்றும், ஆனால், ஜனவரி 15ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அதில், அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *