நவராத்திரியின் 10 நாட்களிலும் பகவதியம்மன் கடும் தவம் புரிந்து அரக்கனை வதம் செய்து வெற்றியுடன் பல்லாக்கில் மீண்டும் ஆலயம் திரும்புவது அய்தீகம்.
நவராத்திரியின் 10_நாட்களுக்கான திருவிழா கடந்த (செப்டம்பர்_23)ம் தொடங்கி நடந்து
வந்தது.

மன்னர் ஆட்சி காலத்தில் அனைத்து சாதியினருக்கும் ஆலய பிரவேசம் தடுக்கப்பட்டிருந்த காலத்தில்.
நவராத்திரி திருவிழாவின் 10_ ம் நாள். கன்னியாகுமரிக்கு 5_கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மகாதானபுரம் பகுதியில்,தேவி பகவதியம்மன் அரக்கனை வதம் செய்து வேட்டையாடி வெற்றி பெருவதின் அடையாளச்சொல்
“பரிவேட்டை”

இந்த பரிவேட்டைக்கு தேவி பகவதியம்மன் வரும்போது தான். ஆலய பிரவேசம் மறுக்கப்பட்ட அந்த காலத்தில். அனைத்து சாதியினரும் பகவதியம்மனை, ஆண்டுக்கு ஒரு முறை நேரில் தரிசனம் செய்து வந்தார்கள். அந்த மரபின் அடிப்படையில் தேவி பகவதியம்மனை தரிசிக்க இன்று, உயர் குலம், தாழ்ந்த குலம் என்ற எவ்வித வேற்றுமையின்றி பகவதியம்மனை ஆலயம் சென்று தரிசிக்கலாம்,பரிவேட்டையின் போதும் தரிசிக்கலாம் என்ற உரிமையை மக்கள் ஆட்சி சட்டப்படி கொடுத்துள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முற்றத்தில் இருந்து வெள்ளி குதிரையின் எழுந்தருளிய தேவி பரிவேட்டை செல்லும் போது தேவியின் 10_நாட்கள் கடும் தவத்தால் சுடேரிய அம்மனின் உடலின் வெப்பம் தணிப்பதற்கு, எலுமிச்சை மாலை காணிக்கையாக செலுத்துவது, வழி நெடுகிலும். இளம் நீர், பன்னீர் அபிஷேகம் செய்யும் பக்தி முயற்சி தொன்று தொட்டு தொடரும் பக்தி வழிபாடுகள் இன்றும்
தொடர்ந்தது.