அரியலூர் அருகே ,வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மண்டபத்தில்,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கம் மற்றும் பெரம்பலூர் வாசன் கண் மருத்து வமனை சார்பில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அரியலூர் மாவட்ட சங்கத்தின் துணை தலைவர் இரா.சுப்ரமணியன்வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் சி இராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலாளர் இரா.ராஜா முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் இராஜ.விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக முகாமில் பங்கேற்ற, முகாமினை துவக்கி வைத்தார்.தொடர்ந்து சிவம் மருத்துவமனை நிர்வாக இயக்கு னர் முதல்நிலை மருத்துவர் வ .சிவக்குமார்,ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் இரா.குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில்,பெரம்பலூர் வாசன்
கண் மருத்துவமனை சார்பில் மண்டல மார்க்கெட்டிங் மேலாளர், முருகானந்தம், கண்மருத்துவர் கண்ணன்,ஏரியா மேலாளர் வினோத்குமார், கிளை மேலாளர்
சத்ய பிரபு, மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ், மற்றும் கண் பார்வை கண்டறியும் தொழில் நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் இலவச கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண் கண்ணாடி பரிசோதனை,கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் கண்டறிதல்,கண் புரை நோய் கண்டறிதல் ,சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் குறைபாடு உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து, அதற்கு பின்பு கண்புரை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ஹீமோ
குளோபின் அளவு,ரத்த சர்க்கரை அளவு,மஞ்சகாமாலை பரிசோத னை,சிறுநீரக பரிசோதனை இசிஜி,கண் விழித்திரை பரிசோதனை, உள் விழிலென்ஸ், ,கண்ணீர்ப்பை அடைப்பு,சிறுநீர் பரிசோதனை, பி ஸ்கேன் உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகளை முகாமில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட காவல்துறை ஓய்வூதியர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் காவல் துறை குடும்ப ஓய்வூதியர்களுக்கு இலவசமாக செய்தனர். இந்நிகழ்வில் ஆவண எழுத்தர் பா.பாண்டிய ராஜன், தொழிலதிபர் இராஜ .உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆ. ரெங்கநாதன் நன்றி கூறினார்.





