• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எக்ஸ்பீரியன்ஸ் மையம் கோவையில் துவக்கம்…

BySeenu

Jul 22, 2025

முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் சிம்பிள் எனர்ஜி, கோவையில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இன்று துவங்கியது. – மேட்டுப்பாளையம் சாலை, ஜிஎன் மில்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட, இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னணி தொழில்துறை வழிகாட்டியுமான டாக்டர் ஏ. வேலுமணி திறந்து வைத்தார்.

இந்த புதிய மையம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மின்சார வாகன அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மையம் வாகன விற்பனை மற்றும் சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் ஜெனரல் 1.5 மற்றும் சிம்பிள் ஒன்ஸ் எனும் இரண்டு உயர் செயல்திறன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனங்கள் அதிக ரேஞ்ச், வேகமான சார்ஜிங் திறன் மற்றும் சிறந்த பயண அனுபவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மைய துவக்க விழாவில் பங்கேற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் தன்னிறைவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தொழில்நுட்பம், தொழில்திறன் மற்றும் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் இந் நிறுவனம், எதிர்கால பார்வை கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது, என்றார்.

பெங்களூரு, ஹைதராபாத், கோவா, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் கொச்சி போன்ற நகரங்களிலும் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் செயல்படுகின்றன என்றும் இந்த வளர்ச்சியின் ஒரு அடுத்த கட்டமாக, 2026 நிதியாண்டிற்குள் இந்தியா முழுவதும் 150 புதிய விற்பனை மையங்கள் மற்றும் 200 வாகன சேவை மையங்களை திறக்க இந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.