• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்சார சட்டத்திருத்தம்- தி.மு.க. எதிர்ப்பு

மின்சார சட்டத்திருத்தம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது.
நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல ஷரத்துகள் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து அந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 குறித்து ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற ஆற்றல்(எனர்ஜி) நிலைக்குழு டெல்லியில் நேற்று கூடியது. ஆற்றல் குழு தலைவர் ஜகதாம்பிகா பால், கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் பலர் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைக்குழு உறுப்பினரான மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்தனர்.