• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்வயர்கள்.., கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பச்சம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக மின்கம்பத்தில் மின் வயர்கள் தனியாக தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இந்த வயர்கள்விவசாய வேலைகளுக்காக செல்பவர்கள் மீது பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளதாக இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றன மேலும் இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்த போது அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வருவதால் பணியாளர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனர். 24 ஆம் தேதிக்கு பின்னரே மின்சார வயர்களை சரி செய்ய முடியும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக தெரிவித்தனர். ஆகையால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள மின் வயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.