• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வெளிநாடு வேலை வாய்ப்பில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள்..,

Byஜெ.துரை

Nov 27, 2023

சென்னை வந்த ஸ்ரீ பிரம்ம குமார் IFS, இணைச் செயலாளர் OE பிரிவு & PGE, சென்னை பிராந்தியத்தின் ஆட்சேர்ப்பு முகவர்களை சந்தித்தார்.

சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வு பற்றிய தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

சென்னையில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் (Protector of Emigrants) ஸ்ரீ ராஜ்குமார் எம், ஐஎஃப்எஸ் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுருக்கமான விளக்கத்தை அளித்தார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விரைவில் இதை செயல்படுத்த இருப்பதையும் அவர் விவரித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம் நிறைவுற்றது. தமிழ்நாடு பிராந்திய முகவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு இறுதியில் நன்றி தெரிவித்தனர்.