• Tue. May 14th, 2024

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த எடப்பாடியார்..,

Byகுமார்

Aug 20, 2023

மதுரையின் மீண்டும் சித்திரை திருவிழா போல மதுரை மாநாடு, கழகக் கொடியினை எடப்பாடியார் ஏற்றும்பொழுது வானத்து தேவதைகள் மலர் தூவது போல ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை. வழியெங்கும் சாரை சாரையாக கழகத் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்பு…

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதல் நாள் இரவு முதல் தொண்டர்கள் குவிந்தனர்.

காலை முதல் வரும் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், முதலுதவி மருத்துவ மையங்கள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன, அதேபோல் 12 இடங்களில் வாகன நிற்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 காலை 8:30 மணிக்கு தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்ட கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு சாலை இருபுறமும்  கழகத் தொண்டர்கள் சாரை,சாரையாக நின்று வரவேற்றனர். எடப்பாடியார் இரட்டை விரலை காண்பித்தபடியே சென்றார். அப்போது தொண்டர்கள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க, கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க, அம்மாவின் வாரிசு எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாநாடு திடலில் வரும்பொழுது தாரை தப்பட்டை முழங்க, சென்டு மேளம் முழங்க, பேண்டு வாத்தியம் முழங்க  கழக மகளரனி சார்பில் பெண்கள் பூரண கும்பம்  மரியாதையுடன் கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடியுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை எடப்பாடியார் ஏற்றும்போது, வானத்திலிருந்து தேவதைகள் மலர் தூவி மரியாதை செலுத்துவது போல ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதையை செலுத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து தொண்டர்கள் எடப்பாடியார் வாழ்க என விண்ணை முட்டும் அளவில் கோஷத்தை முழக்கமிட்டனர். அப்போது கழக அம்மா பேரவையின் சார்பில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 3000 கழக அம்மா பேரவைத் தொண்டர் படை ராணுவ மரியாதைடன் சல்யூட் அடித்து மரியாதை செய்தது. 

அதேபோல் கழக இளைஞர் பாசறை, தொண்டர் படை ஆகியோரும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு வெண்புறாக்களை பறக்க விட்டார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, கோவை, சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கழகத் தொண்டர்கள் கொண்டு வந்த தொடர் ஒட்டஜோதியை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக அம்மா பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நினைவு பரிசு வழங்கினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயளாலர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நினைவு பரிசை வழங்கினர்.

அதனை தொடர்ந்து மாநாட்டு திடலில் அம்மா அரசின் சாதனங்களை விளக்கி வைக்கப்பட்டுள்ள கண்காட்சி கூடங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் அதிக அளவில் குவிந்து இருந்ததால், வேன் மூலம் நின்றுபடியே இரட்டை விலை காண்பித்தபடி சென்றார் .அதனை தொடர்ந்து கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை வழங்கி கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவா இன்னிசை கச்சேரி, புதுக்கோட்டை செந்தில்குமார் நாட்டுப்புற கச்சேரி, கழக இலக்கிய அணி செயலாளர் செல்வன் தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், நடிகை விந்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *