கோவையை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அன்னூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொது மக்கள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நல குறைவால் உயிரிழந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அன்னூரில் உள்ள ஜீவா நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அமுல் கந்தசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.