• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி செய்த எடப்பாடி பழனிச்சாமி…

குமரி மாவட்டத்தில் கடந்த 16_ம் தேதி இரவு முதல், அடுத்த நாள் இரவு வரை 24_மணி நேரம் வரையில் விடாது பெய்த கனமழையால், கோவளம் மீனவர்கள் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 47_வீடுகளில் மழை நீர் புகுந்ததால், முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்.

கோவளம் மீனவர் சுனாமி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை, தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி , முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், தளவாய் சுந்தரம் ஆகியோர் நேரில் சென்று பார்வை இட்டார்கள்.

சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கு 5_கிலோ வீதம் அரிசி பைகள் வழங்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தளவாய் சுந்தரம், உதயகுமார், நாசரேத் பசலியான் ஆகியோர் கோவளம் தேவாலய பங்குத் தந்தை கிசோர், உதவி பங்கு தந்தை சத்திய நாதன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கோவளம் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்கும் கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் கிடப்பதையும், கடற்கரை ஓர சாக்கடை கட்டும் பணியும் தாமதமாகுகிறது என்பதையும் அருட்பணியாளர் கிசோர் தெரிவித்தார்.