• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் கலந்து, கொண்ட எடப்பாடி பழனிச்சாமி..,

BySeenu

Oct 22, 2023

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் சகோதரரும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் அன்பரசன் மகனது திருமணம் ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.