விருதுநகர் மாவட்டம் சட்டப்பணிகள் குழு ஆணையத்தின் சார்பில் அதன் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவின்படி இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜ் வழிகாட்டுதலின்படி இராஜபாளையம் சேத்தூர் சேவகபாண்டியன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில் இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைமை நீதிபதி சண்முகவேல்ராஜ் தலைமை வகித்தார் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பிரீத்தி பிரசன்னா இராஜபாளையம் தெற்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் சார்பு ஆய்வாளர் கவுதம் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவர்கள் ஒரு விஷயத்தில் அடிமையாகி விட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது மாணவர்கள் தங்கள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அதாவது கிரிக்கெட்டில் காவனம் செலுத்தினால் அதில் தான் உங்கள் ஆர்வம் இருக்கும் அதே போல் செல்போன் போதை பொருள்களில் உங்களுடைய கவனம் திசை திரும்பினால் உங்களுடைய வாழ்க்கை சரிந்து விடும். ஆகையால் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா சிறப்புரையாற்றினார்.