தூத்துக்குடி, 13 ஜூலை 2025: இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற கண் பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் தனது புதிய மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது.

மிகச் சிறந்த உட்கட்டமைப்பு, நவீன சாதனங்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஆதரவோடு உலகத்தரத்தில் கண் சிகிச்சையை தென் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற தனது அர்ப்பணிப்பை இதன் மூலம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வெளிப்படுத்தியிருக்கிறது. டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா சம்பத் இப்புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பாலையங்கோட்டை சாலையில் நிறுவப்பட்டிருக்கும் இம்மருத்துவமனை 11500 சதுரஅடி என்ற மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சையில் திறன்மிக்க சேவையை வழங்குவதற்கு தூத்துக்குடி மாநகரில் மிக நவீன கண் பராமரிப்பு மையமாக இது இருக்கும். மாடுலர் அறுவைசிகிச்சை அரங்கு, கண்புரை, கண்அழுத்த நோய், விழித்திரை நோய்கள், நீரிழிவு சார்ந்த விழித்திரை நோய், கண்விழிப்படல பராமரிப்பு, குழந்தைகளுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு பிரிவுகளுடன் மருத்துவமனையிலேயே மருந்தகம் உட்பட கண் சிகிச்சை பராமரிப்புக்கு அவசியமான அனைத்து நவீன சாதனங்களையும் கொண்டு இம்மருத்துவமனை மிகச்சிறப்பான சேவையை வழங்கும்.
ஒரு ஆண்டில் 15,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வரை கண் மருத்துவ சேவையை இப்புதிய மருத்துவமனை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனை தொடங்கப்பட்டிருப்பதன் மகிழ்ச்சியை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு, 2025 ஜூலை மாதம் முழுவதிலும் மருத்துவமனைக்கு வருகை தரும் அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு இலவச மருத்துவக் கலந்தாலோசனை சேவைகளை இம்மருத்துவமனை வழங்குகிறது. இலவசமாக வழங்கப்படும் இந்த முழுமையான கண் பரிசோதனை திட்டத்தில் பங்கேற்பதற்கு தங்களது பெயர்களை பதிவு செய்ய 95949 24048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ரம்யா சம்பத் இது தொடர்பாக கூறியதாவது: “தரம் உயர்த்தி புதுப்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் அதிக திறன் வாய்ந்த மருத்துவ பணியாளர்களுடன் தகுதியும், அனுபவமும் வாய்ந்த கண் மருத்துவர்களின் குழு செயல்படுகிறது. கண்புரை, லாசிக், கருவிழி, விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு மிக நவீன சிகிச்சைகளை வழங்க மருத்துவர்கள் குழுவும் மற்றும் இம்மருத்துவமனையின் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கிறது.
இந்த மருத்துவமனை தொடக்கத்தின் வழியாக, இந்தியாவில் 250-க்கும் அதிகமான மையங்களில் நாங்கள் வழங்கி வருவதைப் போலவே உலகத்தரத்திலான சேவைகளையும் மற்றும் நம்பகமான கண் பராமரிப்பு சிகிச்சைகளையும் தூத்துக்குடி நகரிலும் மற்றும் இதையொட்டி உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.