• Thu. Feb 13th, 2025

கோடை வெயிலில் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை..

Byகாயத்ரி

Mar 24, 2022

அப்பப்பா..! கோடை வெயிலே இன்னும் தொடங்கல ஆன அதுக்குள்ள இந்த வெயில் சக்கைப்போடு போடுது. கோடை காலம் வந்தாலே என்ன சாப்பிடலாம், எந்த உடையை அணியலாம், என்னென்ன விஷயங்கள் பண்ணா வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசிப்போம். அதற்கான பதிவு தான் இது…. மிஸ் பண்ணாம மொத்தமும் படிங்க..

வெயில் காலங்களில் உணவு முறை

கோடைக்காலங்களில் காரம், புளிப்பு போன்றவை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளையும், மாமிச உணவுகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளிட்டவை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் வெயில் காலங்களில் பல பேருக்கு செரிமானமின்மை, மலச்சிக்கல், வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், உணவுகளை கோடைகாலங்களில் அதிகம் சாப்பிடவது நல்லது.

கோடை வெயிலுக்கு ஏற்ற ஆடைகள்

கோடை காலத்தில் வியர்வை உடலில் இருந்து அதிகம் நீர் சத்தாக வெளியேறும். இந்த நேரத்தில் செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, தூய்மையான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது உடலில் வெப்ப நிலையை கட்டுப்படுத்தி சீறாக வைத்திருக்கும். பருத்தி ஆடைகள் உடலுக்கு காற்றோட்டத்தை தந்து உடல் அதிக வெப்பம் அடையாமல் தடுக்கிறது.அதனால் பருத்தி உடைகளை தேர்ந்தெடுங்க.

வெயிலை தணிக்கும் பழச்சாறுகள்

வெயில் காலத்தில் வீட்டிற்குள் வந்தவுடன் நாம் தேடும் முதல் விஷயம் குளிர் சாதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீரை தான். இந்த குளிர்ந்த நீரை அருந்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு. அதற்கு பதிலாக மண்பானை தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். உச்சக்கட்ட வெயில் அடிக்கின்ற அக்னி நட்சத்திர காலத்தில் வியர்வை அதிகம் ஏற்படுவதால் உடலில் நீர் இல்லாத சூழல் ஏற்படும். அப்போது அடிக்கடி பழங்கள் சாப்பிடுவது, பழச்சாறுகள் அருந்துவதன் மூலம் உடலில் எப்போதும் நீர் சத்து இருக்கும்.

வெயில் காலங்களில் உடற்பயிற்சி செய்யும் நேரம்

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்கள் கோடைக்காலத்தில் அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிகளை மேற்கொள்வது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தை தரும். சூரிய ஒளி வருவதற்கு முன்பே இந்த பயிற்சிகளை செய்வதால் உடல் அதிக உஷ்ணம் அடைவதையும், களைப்படைவதையும் தடுக்கின்றது.

உடலில் வெப்பம் குறைப்பதற்கான வழி

வெயில் காலத்தில் உடலின் வெப்பத்தைப் போக்க ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு ஒருமுறை எண்ணை குளியல் செய்வது உடலுக்கு நல்லது. இந்த எண்ணைக்குளியலை முறைப்படி செய்வதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் ., ஏற்கனவே உடலில் இருந்த பாதிப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இதையெல்லாம் நாம் அனைவரும் பின்பற்றினால் இந்த கோடை வெயிலிலிருந்து சுலபமாக தப்பித்துவிடலாம். மறக்காம இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…