• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள். டி.ராஜேந்திரர்

கன்னியாகுமரியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அருட் சகோதரி முனைவர். அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை அமைப்பின் தலைவருமான பி.டி.செல்வகுமார், திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரர் பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார்.

டி.ராஜேந்திரர் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தவை. கனமழை காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு என்னால் ஆன உதவியை செய்ய வோண்டும் என விரும்பினேன்.

திருநெல்வேலி பகுதியில் உதவி பொருட்கள் கொடுத்த இடத்தில் அதிக கூட்டத்தால், அந்த பகுதியில் காத்து இல்லாததால் எனக்கு மயக்கம் ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் உண்ட உணவின் ஒவ்வாமையால் ஏற்பட்டது என மருத்துவர் தெரிவித்தார்.

நான் நன்றாக நலமாக இருக்கிறேன். இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். சினிமா கதாநாயகனின் கட்டவுட்டுக்கு ” பால்” அபிஷேகம் செய்யாதீர்கள். அந்த பாலை பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

இந்தியாவின், தமிழகத்தின் தென் கோடி முனையை நினை ,நினை. காலை கடலில் நனை என நினைத்து, நினைத்து கன்னியாகுமரி வந்தேன் என டி.ஆர். அவரது தனித்த பேச்சின் தன்மையில் வெளிப்படுத்தினார்.