ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்..,
ஒரு நாட்டின் பிரதமர் மாநிலத்திற்கு வரும்பொழுது அவரை வரவேற்க மாநில முதலமைச்சர் வரவேண்டும் என்பது நடைமுறை. அதை புறக்கணித்துவிட்டு தமிழக முதலமைச்சர் ஊட்டியில் சென்று ஓய்வெடுக்க சென்றிருக்கிறார்.
தமிழகத்தின் கலாச்சாரத்தை பாரத பிரதமர் வேஷ்டி, சட்டை அணிந்து பின்பற்றுகிறார். ஆனால் நமது மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் தான் பார்த்துக் கொன்டு இருக்கிறீர்கள்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி முதலில் உங்கள் கையெழுத்துக்களை தமிழில் போடுங்கள். பெயரை தமிழில் வையுங்கள் என கூறியிருக்கிறார். அனைத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
நடத்தும் பள்ளிக்கூடத்தில் தமிழ் கிடையாது, பெயரில் தமிழ் இல்லை, பேசுவதில் தமிழ் இல்லை, கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிப்பதில்லை. ஆனால் தமிழ், தமிழ் என பேசுகிறார்கள். இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
ரயில்வே அமைச்சர் உட்பட அனைவரும் தமிழில் நலம் விசாரிக்கிறார்கள். அது எத்தனை பெரிய விஷயம். பிரதமர் கூறியது போல், முதல்வர் உட்பட அனைவரும் அழுது கொண்டே இருங்கள்.
ஊட்டியில் சென்று தமிழக மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை என தமிழக முதல் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ராமநாதபுரத்தில் 8000 கோடிக்கான திட்டங்களை பாரத பிரதமர் சமர்ப்பிக்கிறார்.
இப்படி இருக்க டக் அவுட் பத்தி பேசுகிறார் நாட் அவுட் ஆகப் போகிறவர் டக் அவுட் பத்தி பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக மக்களுக்காக பிரதமர் வந்திருக்கும் பொழுது அவர் வரவேற்க செல்லாதது என்ன அர்த்தம்.
மருத்துவ நுழைவு தேர்விற்கான இன்டர்வியூ என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அது எப்படி நியாயம்? ஆளுங்க சேர்ந்து தேவைக்காக தேதியை மாற்றம் செய்து 2000 மூன்றாயிரம் மக்களை துன்புறுத்துவது அவரின் ஆணவத்தை காண்பிக்கிறது.
இரண்டு மாநிலங்களை பார்த்திருக்கிறேன் ஒரு மாநிலத்தில் இதே போன்று தான் ஏறக்குறைய ரிப்ளை ஆகிறது. எனது மனதில் எப்பொழுதெல்லாம் தெலுங்கானாவிற்கு பிரதம மந்திரி வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் அவர் புறக்கணிப்பார். இன்று மக்கள் அவரை புறக்கணித்தனர். அதே நிலைமை தான் தமிழகத்திற்கும் வரப்போகிறது.
குளுகுளு என இருக்க வேண்டும் என்று ஊட்டிக்கு சென்று விட்டார் முதலமைச்சர் ஆனால் சென்னை குழு குழு என ஆகிவிட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். இலங்கையில் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை பிரதமர் விடுவித்துள்ளார். இவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் பொழுது, அது குறித்து பேசாமல் வந்திருப்பார்.
குடியரசு தலைவர் அலுவலகத்தை நான் மதிக்க மாட்டேன். பிரதமரை மதிக்க மாட்டேன். நாடாளுமன்றத்தை மதிக்க மாட்டேன் என செயல்பட்டால் மக்கள் உங்களை மதிக்காமல் போவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசினார்.
இப்பொழுது தூக்குபாலும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை ஆன் செய்யும் பொழுது ஒரு சிறிய பிரச்சனை இருக்கத்தான் செய்தது. ஸ்டார்ட் ஆனதை பாருங்கள், ஸ்ட்ரக் ஆனதை பார்க்காதீர்கள்.
செல்வப் பெருந்தகையின் கருப்புக்கொடி முத்தரசன் பேசியது அனைத்தும் நீர்த்துப் போய்விட்டது. பேசுகிறவர்கள் பேசிக்கொண்டு போகட்டும், பாரத பிரதமரின் பலத்தில் அனைத்தும் கீழே விழுந்து விட்டது. அழுகிறவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும். நாங்கள் எழுந்து கொண்டே இருப்போம்.
தமிழக வெற்றி கழகம் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது குறித்து கேட்ட பொழுது..,
பெரிய போராட்டம் நடைபெற்றதா, அப்படியா என பேசியதோடு பொதுச்செயலாளர் ஓடியதை தான் பார்த்தேன். வக்ஃபு போர்ட் வாரியம் குறித்து கேட்ட கேள்விக்கு, அவரால் பதில் கூற முடிந்ததா? இன்று இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு வக்ஃபு வாரியத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இப்பொழுது என்ன கூற போகிறார்கள் என கேள்வி எழுப்பிவிட்டு சென்றார்.