• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காரைக்காலில் திமுக சார்பில் முப்பெரும் விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 9, 2026
காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், மாநில பொருளாளராக அமுதா ஆறுமுகம் பதவியேற்பு விழா மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. 


விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், நாக.தியாகராஜன், வடக்கு தொகுதி பொறுப்பாளர் பிரபு உள்ளிட்ட ஏராளமான திமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமை இலக்கிய அணி துணைத் தலைவர் கவிதைப்பித்தன், தலைமைக் கழக சொற்பொழிவாளர் நாகை நாகராஜன், கழக இளம் பேச்சாளர் ப்ரீத்திஆகியோர் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாநில பொருளாளராக அமுதா ஆறுமுகம் பொறுப்பேற்றுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.