• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் அலையடிக்கும் தி.மு.க.,தொண்டர்கள் கூட்டம்..,

குமரியில் நேற்று(மார்ச்_8) முன் இரவு நேரத்தில் கன்னியாகுமரி, கொட்டாரம்,
அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், மைலாடி, மருங்கூர் பகுதிகளில் நீண்ட வரிசையில் வேன்கள் வந்து நின்ற சில மணிநேரத்தில். தி.மு.க.வினர் பெரும் பாலும் லுங்கி,டிசர்ட், வெள்ளை,வண்ண மேலாடையுடன். கழுத்தில் கருப்பு, சிகப்பு துண்டுடன்
வாகனத்தில் ஏறி அமர்ந்த காட்சியை பார்த்த போதுதான்.

திருச்சி தி.மு.க.,மானாட்டுக்கு செல்வதை உணர்ந்த சூழலில்
நாம் கண்ட காட்சி.

கட்சி தொண்டர்கள் புடைசூழ வந்த அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபுவும் லுங்கியில் வேனில் ஏற்றி முன் இருக்கையில் அமர்ந்தார். பாபு விடம் திருச்சி பயணமா.? என பொதுவாக கேட்ட போது. உற்சாக மிகுதியில் திருச்சி மாநாட்டில் திரளும் கட்சியினர் கூடும் கூட்டம். தலைவர் தளபதியின் சொல். நமக்கும்,
டெல்லிக்கும் தான் போட்டி. தி.மு.க. என்பது தீரர்கள் கூட்டம். திருச்சியில் கூடும் கூட்டம் டெல்லிக்கு எச்சரிக்கை மணி என அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொண்டர்கள் கூடி நிற்க ‘அரசியல் டுடே’ விடம் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால். குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 100_க்கும் அதிகமான வாகனங்களில் திமுகவினர் நள்ளிரவு நேரத்தில் திருச்சி நோக்கி பயணப்பட்டார்கள்.