• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வக்பு சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Apr 26, 2025

இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதன் வரு பகுதியாக தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்த படும் என்று மதிதிபக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மதிமுக நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மதிமுக கழக அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமை தாங்கினார்.

மதிமுக கழக பொருளாளர் பொறியாளர் செந்திலதிபன் கன்டன உரையாற்றினார். ஆட்சி மன்ற குழு செயலாளர் டாக்டர் கிருஷ்ணன், உயர்நிலை குழு உறுப்பினர் ஆர் ஆர் மோகன் குமார், விவசாய அணி செயலாளர் அரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு வரவேற்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிஎன் இராஜேந்திரன், குகன் மில் செந்தில், அரிமா நாகராஜ், மதிமுக கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அன்பு என்கிற தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.