• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக பிரமுகர், விவசாயின் நிலத்தை அபகரிக்க அடாவடி முயற்சி.., காவல் துறை வருவது அறிந்து தப்பி ஓட்டம்…

ByNamakkal Anjaneyar

Jun 15, 2024
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்தி பாளையத்தில் பக்கத்து தோட்டத்துக்காரர் திமுக பிரமுகர் ஒருவர் விவசாயிக்கு கொலை மிரட்டல், மோட்டார்களை அடித்து நொறுக்கி அடாவடி செய்தனர். காவல்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்தி பாளையம் சொட்டைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருக்கு பன்னீர்குத்தி பாளையம் பகுதியில் 74 / 5 என்ற சர்வே எண்ணில் இரண்டு ஏக்கர் தோட்டம் உள்ளது. இவர்கள் தோட்டத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தை என் .கே . பழனிச்சாமி என்பவர் வாங்கியுள்ளார் கடந்த சில ஆண்டுகளாகவே பழனிச்சாமி கோபாலகிருஷ்ணன் தோட்டத்தில் உரிமை கொண்டாடி வந்துள்ளார். இது தொடர்பாக திருச்செங்கோடு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் இவரது தோட்டத்திற்கு வந்த பழனிச்சாமியின் ஆட்கள் கோபால கிருஷ்ணனின் மின்மோட்டாரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் தோட்டத்தின் ஒரு பகுதியில் விளைந்த கரும்பு பயிர்களை அறுத்து சேதம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து கரும்பு பயிரை வெட்ட ஆரம்பித்துள்ளனர். இதனை அறிந்த கோபாலகிருஷ்ணன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் காலம் தாழ்த்தி வந்ததால் கரும்பு பயிரை வெட்ட வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து கரும்பு வெட்ட வந்தவர்கள் காவல்துறை வருவதை அறிந்து திரும்பி சென்று விட்டனர்.

இதன் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் கூறும்போது…. எனது இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்க திமுக பிரமுகர் என்.கே. பழனிச்சாமி முயல்கிறார். எனது தோட்டத்தில் விளைந்த கரும்பு பயிரை அடியாட்களை வைத்து நாசப்படுத்துகிறார். மேலும் மோட்டர் போர்வெல் ஆகியவற்றை சேதப்படுத்துகிறார். நிலம் தொடர்பாக ஏற்கனவே திருச்செங்கோடு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்னையும் எனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே எங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பழனிச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதே கருத்தை இவரது தந்தை சண்முகமும் தெரிவித்துள்ளார்.

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தும் மின்மோட்டார்களையும் சேதப் படுத்தி வரும் பழனிச்சாமி எந்தக்கட்சி ஆளுங்கட்சியாக வருகிறதோ அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொள்பவர்.இதற்கு முன் அதிமுகவில் இருந்த பழனிச்சாமி தற்போது ஆளுங்கட்சியான திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.