• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 10, 2025

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநகரில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நான்காம் ஆண்டு சாதனைகள் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை வகித்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி கருப்பசாமி முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பேச்சாளராக முன்னாள் மேலவை உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன் MP
கலந்து கொண்டார். சவால்கள் நிறைந்த நான்காண்டு கால ஆட்சியில் துவக்கத்திலேயே கொரோனா இரண்டாவது அலை வந்து பல உயிர்களை இழந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டார் முதல்வர் .

தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக அரசு நாலு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் சுமையை வைத்து சென்றது அந்த சவால் நிறைந்த பணியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை முதல்வர் கொண்டு வந்தார். விடியல் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பயணத்திற்கு இலவச பேருந்துகள் வழங்கியது தமிழகத்தில் தான்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி தாய்மார்களின் சுமையை குறைத்தது இந்த அரசு. புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அதே போல் தமிழக முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய அரசு. இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்த அரசு.

விசைத்ததறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 2700 கோடி ரூபாய் அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 5700 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுறவு கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி,

நான்காண்டு ஆள ஆட்சி மக்களுக்கான ஆட்சி ஆனால் மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய முக்கிய நிதி ஆதாரங்களை தர மறுக்கிறது.

உச்ச நீதிமன்றம் எந்த கவர்னருக்கும் மிகப்பெரிய தண்டணைகள் வழங்கியது இல்லை ஆனால் நமது தமிழக கவர்னருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட உரிமை கிடையாது . மாநில அரசுக்கு உரிமையென கூறி மிகப்பெரிய தண்டனை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழங்களுக்கு ஆளுநர் அல்ல வேந்தர் முதலமைச்சர் தான் வேந்தர் என தீர்ப்பு வழங்கியது.

சென்னை தாக்கிய 2 புயல் கானால் 45 ஆயிரம் கோடி நிவாரணசேதம் கேட்டதில் பெறும் 270 கோடி கஞ்சதனமாக வழங்கினர். 100 நாள் திட்டம் வேலை திட்டத்தில் 4130 கோடி பணம் வழங்காத தால் அனைத்து ஒன்றியங்களிலும் போராட்டம் நடந்த பின்
2099 கோடி வழங்கியது.

2300 கோடி கல்வி நிதி வழங்காமல் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிதன் தமிழர்களை நாகரிகம் மற்றவர்கள் என கூறியது பெரும் சர்ச்சைக்கு கிளம்பியது பின்னர் மன்னிப்புக்கு கோரினார்.