கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு நடத்த தலைமை கழகத்திலிருந்து கழக கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் EXMLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும்,கழக அமைப்புகளை வலுபடுத்துவது சம்பந்தவாகவும்,ஜனவரியில் நடைபெறும் மாநாடு சம்பந்தமாகவும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் கழக தேர்தல் பிரிவு செயலாளர் ,மண்டல துணைப் பொறுப்பாளர் கணேஷ் கழக இளைஞரணி துணை துணைச் செயலாளரும் கோவை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனந்த் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருமதி .D. வனிதா துரை முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத் தலைவர் LJJ. ஜெகன் , மாவட்ட பொருளாளர் வாழையிலை முருகேசன் ,மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு . சுரேஷ் ,A. தனலட்சுமி , கோட்டூர் ரவிச்சந்திரன் ,செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் விக்ரம் ,அய்யாசாமி,
மருதப்பன், மணிகண்டன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன், கிருஷ்ணன் மாணவர் அணி செயலாளர் செல்லதுரை , துணைச் செயலாளர் ஆறுச்சாமி,மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னபூரணி, காளீஸ்வரி, மெர்சி மற்றும் தொழிற்சங்க பேரவை செயலாளர் வடிவேல், வன்னியப்பன் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயக பாலு, சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் கந்தசாமி, சூலூர் பேரூராட்சி செயலாளர் செந்தில், இருகூர் பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், குறிச்சி பகுதி செயலாளர் ரமணா ஜோசப், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் சின்ன சேட்டு, மதுக்கரை ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, வெள்ளலூர் பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணியன்,கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் சரண் பாபு, கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிராஜா, கிணத்துக்கடவு பேரூர் கழக செயலாளர் ஆனந்த் , பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்துகொண்டனர்.