ஒரத்தநாடு அருகே பருதிகோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 17 பேர் தஞ்சை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் மல்லிகா மாணவர்களை வாழ்த்தி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவி உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.





