• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

ByR. Vijay

Mar 14, 2025

நாகை அருகே 3ம் வகுப்பு மாணவி இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு மெல்லிசை பாடல் வைரல்.முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மடப்புரம் ஊராட்சி சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் – பாரதி இந்த தம்பதிகளின் மகள் மகிமா இவர் கருங்கண்ணியில் உள்ள அரசு உதவி பெறும் புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கிழக்கு வாசல் திரைப்படத்தில் வரும் பச்ச மல பூவு என வரும் பாடலை மெட்டு அமைத்து மெல்லிசை தனிப்பாடல் மூலம் இயற்கையின் வளங்கள் குறித்து பாடிய விழிப்புணர்வு பாடலுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது .

இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடன் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசை தெரிவித்தார். அதன்படி மடப்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலெட்சுமி ரமேஷ் மாவட்ட ஆட்சியரிடம் கூறியதுடன் உடனடியாக அந்த மாணவியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அந்த மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.