தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், மதுரை மாவத்திற்கு வருகை தந்த 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், வரவேற்று அவர்களுடன் தமிழ் மொழி, தமிழர் வாழ்க்கை முறை, பண்பாடு குறித்து இன்று(10.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார்.

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் “மரபின் வேர்களோடு” உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை , தமிழ்நாடு முதலமைச்சர், 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.
அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்
கொள்ளப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் கடந்த 1.8.2025 முதல் 15.08.2025 வரையிலான பதினைந்து நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (10.08.2025) மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த அயலகத்தமிழ் இளைஞர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்று , அவர்களுடன் தமிழ் மொழி, தமிழர் வாழ்க்கை முறை, பண்பாடு குறித்து கலந்துரையாடினார். இன்றைய தினம் அயலகத்தமிழ் இளைஞர்கள் கீழடி அருங்காட்சியகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட உள்ளனர்.தொடர்ந்து நாளை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை பார்வையிட்ட பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மதுரை மாவட்டம், தமிழ்நாட்டின் தொன்மையான நகரமாகும், மதுரை கலாச்சார,பண்பாட்டு திருவிழாக்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, சித்திரை திருவிழா மதுரை மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.மேலும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு மகளிர் உதவிக் குழுக்கள் மூலம் மானிய விலையில் கடன் வழங்கி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாதம்தோறும் கலைஞர் மகளிர் உதவித் தொகை மற்றும் விடியல் பயண திட்டம் மூலம் இலவச பேருந்து பயண வசதி உள்ளிட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மற்றும் கல்லூரிகளில் புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மாணவ மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.






; ?>)
; ?>)
; ?>)
