கன்னியாகுமரி மாவட்டம் காப்பி காடு பகுதியில் நான்கு வழி சாலை பணிகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஒன்பது காங்கிரசார் கைது செய்யபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் காப்பி காடு பகுதியில் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக நான்கு வழி சாலை பணிகளுக்கு உரிய இழைப்பீடு கொடுக்கவில்லை என கூறி பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடர பட்டது. வழக்கில் பணிகள் துவங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் துவங்க வந்த அதிகாரிகளையும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல பல முறை கூறியும் மாவட்ட ஆட்சிரை சந்தித்து பேசும் வரை பணிகள் துவங்க விடமாட்டோம் என ஹிட்டாச்சி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பல முறை எச்சரித்தும் கலைந்து செல்லாததால் போலீசார் சட்டமன்ற உறுப்பினர் தாரகை காங்கிரஸ் மாவட்ட தலைவர் வினுலால் சிங் உட்பட்ட ஒன்பது பேரை கைது செய்து போலீஸ் வாகனம் மூலம் கொண்டு சென்ற பின் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.