மதுரை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் உள்நாட்டு சேவைகள் தவிர்த்து துபாய் சிங்கப்பூர் என வெளிநாட்டு சேவைகளும் உள்ளது. அந்த வகையில் மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி சேவை வழங்கி வருகிறது. ஆனால் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தாமதமாக புறப்படுவது மற்றும் திடீரென ரத்து செய்யப்படுவது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த நிலையில் இன்று துபாயில் இருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் குறித்த நேரத்தில் வரும் என்றும் ரத்து செய்யப்பட்டது என்றும் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டிருப்பது துபாய் செல்ல வந்த பயணிகள் மற்றும் துபாயில் இருந்து வரும் பயணிகளை வரவேற்க வந்துள்ளவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே துபாய் விமானம் தாமதம் மற்றும் அடிக்கடி ரத்து செய்ய குற்றச்சாட்டு உள்ள நிலையில் விமானம் வருவது குறித்த அறிவிப்பிலும் குளறுபடி உள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.