• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் அவதி..,

ByKalamegam Viswanathan

May 23, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மறுபுறம் என பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக காலை நேரங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கோவில் முன்பு அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க விட்டு செல்வதும் மற்றும் வாகனங்களை மறித்து பயணிகளை துன்புறுத்துவதும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகமோ காவல்துறையோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கோவில் முன்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

மேலும் போக்குவரத்து நெருக்கடியால் சோழவந்தானின் நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மீறி நடத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.