• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கரூர்- திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம்

ByA.Tamilselvan

Oct 13, 2022

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் அமைகிறது எனதமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்துள்ளது. தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டு உள்ளது. இந்நிலையில் “இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயமாக கரூர்,திண்டுக்கல் சரணாலம் அமைய உள்ளது.