பெருநகர சென்னை காவல்துறை மற்றும் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் உட்கோட்டத்தின் சார்பில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்வே நிலையத்தின் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார், புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சிவகுமார், புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன் மற்றும் மீனம்பாக்கம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கதிர் காமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கினர். மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம், சாலைகளில் பாதுகாப்பாக செல்வதற்கான அறிவுரைகள் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஹெல்மெட் அணிவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிகவேகமாக செல்லக்கூடாது போன்ற விஷயங்களையும் இதை மீறிவோர்க்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் என கூறினார்.