• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Mar 12, 2026

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனே தமிழக அரசு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அக் கட்சியின் மாவட்ட செயலாளர் எம் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் அரியலூர் மாவட்ட ஊராட்சி சேர்மன் பொ .சந்திரசேகர், கவிதா G.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். சாதிவாரிகணக்கெடுப்பினை தமிழ்நாடு அரசு உடனே தொடங்க வேண்டும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும், எஸ்.ஓ.பி யை நடைமுறையினை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாகஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அரியலூர் நகர செயலாளர் எம் எஸ் கே கார்த்திக் வரவேற்றார்.இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பி சேகர், சி.மார்ட்டின் டோனி,எம்எல் ராஜேஷ், ஏ பிரியா தர்ஷினி, வி திருத்தணி முருகன்,ஆர் விக்னேஷ்,சி முத்துகிருஷ்ணன், எஸ் ஹரி கிருஷ்ணன்,எஸ் பவுன்ராஜ்,கே அருண்குமார்,கே வாசந்தி ,எம்.ஏ .காயத்ரி, எஸ் புவனேஸ்வரி, ஏ சகுந்தலா, மாவட்ட அணி பொறுப்பாளர்கள் கே ரவிக்குமார், ப. சித்திரைக் கண்ணன், சி.அபிநாஷ், ஜி ஆர் முரளி,வி. பிரவீன் குமார்,நகர பொறுப்பாளர்கள் டி தமிழரசன்,எஸ் ரஜினி, எஸ் பவுன்ராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் சி பால குரு, எஸ் இளையராஜா,எஸ் ராஜா,எஸ் வி ராமச்சந்திரன்,எம் கார்த்திக்,ஏ அரவிந்த்,எஸ் விக்னேஷ்,கே ஆர் சி எழிலரசன், டி. தமிழ்ச்செல்வன், டி.தேவா, டி.சத்யராஜ், வி.கஜேந்திரன்,யூ.சரவணன், ஆர்..மனோகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.