தனிப்பட்ட பொதுநல வழக்கு மதுரை நீதிமன்றத்தில், கன்னியாகுமரியில் உள்ள கன்னியம்பலம் பகுதியின் தலை வாசலுக்கு நேர் பின்பு 50_ ஆண்டுகளுக்கு முன்பு ‘அளிக்கதவு’ ஒன்று இருந்தது.

கன்னியம்பலம் வருடம் முழுவதும் மக்களின் பயன்பாட்டு மண்டபம் அல்ல. கோவில் திருவிழா காலம் வருடத்தில் மொத்தம் 20 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். சில திருவிழா காலத்தில் யானை கட்டும் இடமாக இருந்தது. தேரின் பொருட்களை பாதுகாப்பு இடமாக இதுவரை இருந்து வரும் நிலையில்.
நீதிமன்றம் பொது நல வழக்கில் தினசரி மக்கள் பயன் பாட்டில் இருக்கும் கன்னியம்பலத்தில் சுகாதார கேடாக இருக்கிறது இதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற வழக்கை விசாரித்த இரண்டு பென்ஞ் நீதிபதிகள். கடைகளை (அக்டோபர்_6)ம்தேதிக்குள் காலி செய்து கன்னியம்பலம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்ற மதுரை நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து.

கன்னியம்பலத்தின் பின் பக்கம் சுவரும், சுவரின் பின் பக்கம் இருந்த இரண்டு கடைகளின் பகுதிகள் ஜேசிபி கொண்டு இன்று (அக்டோபர்_5)ல் இடித்து அகற்றப்பட்டது.
கன்னியம்பலத்தின் பூட்டப்பட்ட தலை வாசல் பகுதி இதுவரை ஆட்டோ ஸ்டான்றாக
இருந்தது. இந்த புதிய நடவடிக்கையால் இனிமேல் தேரோடும் வீதியில் ஆட்டோவை நிறுத்திவைத்தால். தேரோடும் வீதியில் புதிதாக வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடியை அதிகரிக்க செய்யும் நிலையில்.
திருவள்ளூர் சிலைப்பாறை, கண்ணாடிப் பாலம் செல்ல படகு பயணத்திற்கு, விடுமுறை நாட்களில் தேரோடும் வீதியில் நீண்ட வரிசையில் வெயிலில் காத்து நிற்கும் சுற்றுலா பயணிகள் இனி கன்னியம்பலம் வழியாக நிழலில் செல்லமுடியும்.