கலைஞர் ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை காலை 4 மணிக்கு திறப்பதில் தாமதம் – விவசாயிகள் கார சார விவாதம், சந்தைப்படுத்த்தில் சிக்கல் இருப்பதால் விவசாய பொருட்களை கொண்டு சென்று கொட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கடவூர், குளித்தலை, புகளூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 7 வட்டங்களை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, அவர்கள் ஏற்கனவே கொடுத்த புகார்கள் குறித்த மனுக்களுக்கும், புதிய மனுக்களுக்கும் தீர்வு கண்டனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தென்னிலை மேல்பாகம், கருந்தோட்டம்புதூர் பகுதியில் ஏற்கனவே மின்வாரியத்திற்கு சொந்தமான ஹெச்.டி லைன், எல்.டி லைன் செல்லும் நிலையில், தற்போது டாடா நிறுவனமும் அவர்களும் கம்பம் கட்டி லைன் எடுத்து செல்கின்றனர்.
ஆகையால் சாலையும் பயன்படுத்த முடியாது என்று கோரிக்கை வைத்தோம்,

தென்னிலை முதல் கார்வழி வரையிலான இணைப்பு சாலையை மூன்று வருடங்களாக செப்பனிட கோரி மனுக்கள் கொடுத்தும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தியும் அதன் மீது நடவடிக்கை இல்லை என்றும் ஆகவே, விவசாயிகளுக்கு ஏதுவாக, அந்த இணைப்பு சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா சார்பில் மனுக்களையும் மீண்டும் அளிக்கப்பட்டது.
இதே போல், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, உப்பிடமங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான விவசாய பொருட்களை கரூர் உழவர் சந்தையில் விற்று வரும் நிலையில், தற்போது புதிய அதிகாரி ஒருவரின் செயலால், விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், கலைஞர் கொண்டு வந்த நல்ல திட்டம் இந்த கலைஞரின் உழவர் சந்தை திட்டம், கரூரில் ஏராளமான கட்டுப்பாடுகள் கொண்டுள்ளதாகவும், காய்கறிகளை விற்க முடியாமல் ஆடு, மாடுகளுக்கு கொண்டு சென்று கொட்டப்படுவதாகவும், மேலும், விற்பனைப்படுத்தப்படுவதில், நிர்ணயம் செய்யப்படும் தொகையை நாங்களே குழு அமைத்து நிர்ணயித்து கொள்ளுங்கள் என்றும், அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய உழவர் சந்தை 5 மணிக்கே திறக்கப்படுவதால் காய்கறிகள் தேங்குகின்றன. என்றும் ஆகவே உரிய நடவடிக்கை எடுக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.