• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராணுவ தளபதி பிபின் ராவத் மரணம். இந்திய தேசம் முழுமையும் கண்ணீரில் ஆழ்ந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராணுவ உயர் அதிகாரிகளுடன் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியார் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 13 பேர் மரணமடைந்த சம்பவத்தை கேட்டு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தொடர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையிலிருந்து கார் மூலமாக குன்னூர் சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் நேரு, ஏ வ.வேலு ,தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் சென்றுள்ளனர்.