தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் 33 வயதுடைய அஸ்வின். இவருக்கு ஏழு வயதில் மகள் உள்ளார்.

இவர் தனது மகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக காமராஜர் பகுதியில் உள்ள பேக்கரிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
பேக்கரி அருகே சென்றபோது தனது இருசக்கர வாகனத்தை பேக்கரிக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்பொழுது கடையின் வெளியே ஏர்டெல் பைபர் கேபிள் இருந்துள்ளது.
இதனைப் பார்த்த அஸ்வின் தனது காலால் அந்த கேபிளை தள்ளிவிட முயன்ற போது திடீரென மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற் கட்ட விசாரணையில் கடையின் வெளியே இருந்த மின் கம்பத்தில் ஏர்டெல் பைபர் கேபிள் கட்டி வைத்ததாக தெரியவந்துள்ளது.
ஏர்டெல் பைபர் கேபிள் மின்கம்பத்தின் ஒயர்கள் மீது உரசி இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஏர்டெல் மற்றும் மின்சார துறை மீது சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.