தாம்பரம் வ.உ.சி தெருவில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரவேல்.இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

தரை தளத்தில் தனது அம்மா சுப்புலட்சுமியும், முதல் தளத்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் ,இரண்டாவது தளத்தில் அவரது தம்பி ரவி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி அன்று வீட்டில் அம்மா மற்றும் மகள்களை வீட்டில் விட்டுவிட்டு,குமரவேல் அவரது மனைவி மற்றும் தம்பி ரவி குடும்பத்தினருடன் போரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாலை 6:00 மணி அளவில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குமரவேலின் மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,அப்பா பாட்டி வீட்டில் இருக்கும்போது பெண் ஒருவர் தலைக்கவசம் அணிந்து கொண்டு வீட்டில் நுழைந்து பாட்டி அணிந்திருந்த 2 1/4 தங்கச் செயின் பறித்து விட்டு சென்றதாகவும், கையில் இருந்த வளையலை பறிக்க முற்பட்டபோது பாட்டி கூச்சலிடவே வீட்டில் இருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு பெண் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண் தெரிவித்ததை கேட்ட குமரவேல் உடனே போரூரிலிருந்து வீட்டிற்கு வந்து அக்கம் பக்கம் விசாரித்த பிறகு தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வ உ சி தெருவில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றிய போது கருப்பு நிறம் புடவை அணிந்து வந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணிந்தபடி வீட்டில் இருந்து சாலையில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வீட்டில் இருந்த ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக விசாரணையை மேற்கொண்டனர்.
அதுமட்டுமில்லாமல் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களில் உள்ள புகைப்படங்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது பாட்டியின் இரண்டாவது மகன் ரவியின், மனைவி(மருமகள்) ரேவதியின் செல்போனில் பெண் ஒருவரின் புகைப்படம் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஒத்து போனது.
உடனே போலீசார் இரண்டாவது மருமகள் ரேவதியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது மருமகள் ரேவதியின் ,உடன்பிறந்த அக்கா சுமதிக்கு பணம் தேவைப்பட்டதால் தொடர்ந்து பணம் கேட்டு வந்த நிலையில் தனது மாமியாரிடம் நகைகள் இருப்பதாகவும் நாங்கள் போரூர் பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது தனியாக இருக்கும் மாமியாரிடம் நகையை பறித்துச் செல்லுமாறு பிளான் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் திருடிய நகையை சிதம்பரம் அருகே ஒரு நகைகடையில் கொடுத்து, நகையை உருக்கி அதனை பணமாக மாற்றி தாம்பரம் அருகே உள்ள பிரபல நகை கடையில் மூன்று சவரம் புதிய நகையை வாங்கி உள்ளார்.
மேலும் ரேவதியிடம் இருந்தால் மூன்று சவரன் தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்து நகையை திருட பிளான் போட்டு கொடுத்த மருமகள் ரேவதி மற்றும் நகையை திருடிய சுமதி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கஷ்டமா இருக்கிறது என பணம் கேட்டா அக்காவுக்கு, எனது மாமியார் கிட்ட இருந்து நகையை பறிக்க பிளான் போட்டு கொடுத்த தங்கை அக்கா தற்போது சிறையில் அடைத்த சம்பவம் தாம்பரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.