• Sun. May 12th, 2024

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

BySeenu

Feb 7, 2024

கோவையின் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது “இன்ஸ்டாகிராம்” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையின் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம். பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.
தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *